நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

21.12.10

அண்ணாமலையின் அருளாளர்



ரமண மகரிஷி 

திருநட்சத்திரம்:
மார்கழி - 7 - திருவாதிரை
(டிச. 22 ) 


.
மனிதராகப் பிறந்து தெய்வமாக உயர்ந்தவர் ரமண மகரிஷிமதுரைக்கு அருகில் உள்ள திருச்சுழி கிராமத்தில், சுந்தரம் ஐயர்-அழகம்மை தம்பதியருக்கு மகனாய் 1879, டிசம்பர், 30ம் தேதிமார்கழி  மாதம்-  திருவாதிரை நட்சத்திரத்தில் உதித்தவர்.

ரமணர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தார். ஒருமுறை ரமணரின் சிறிய தகப்பனார் திருவண்ணாமலை பற்றியும் அருணாசலேஸ்வரர் பற்றியும் ரமணரிடம் கூற அந்த நாமத்தில் லயித்த ரமணர், ‘நான் யார்?’ எனும் ஆத்ம விசாரத்தில் ஆழ்ந்தார். வீட்டை விட்டு வெளியேறி திருவண்ணாமலையை அடைந்தார்.
.
ஆயிரங்கால் மண்டபத்தில் தியானத்தில் ஆழ்ந்தார். அவர் மண்ணில் உதித்த மகான் என்பதை மௌன சுவாமிகள் உலகிற்கு உணர்த்தினார். சேஷாத்ரி சுவாமிகளின் ஆதரவும் ரமணருக்குக் கிட்டியது. எண்ணற்ற அற்புதங்களை தன் மௌனத்தினாலேயே நிகழ்த்திய மகத்தான மகான் இவர்.

பதினோரு வயதிலிருந்து தன் வாழ்நாள் முழுதும் திருவண்ணாமலையிலேயே கழித்தார். அன்பே சிவம் என அன்பு வழியில் சகல ஜீவராசிகளிடம் பாரபட்சமில்லாமல் அன்பு செலுத்தி திருவண்ணாமலையில் (14.04.1950ஜோதியாய் கலந்த மகான், ரமணர்.

நன்றி: தினகரன்

காண்க:

ரமண மகரிஷி (விக்கி)
ரமண மகரிஷி சரிதம் (தமிழ் மரபு அறக்கட்டளை)
ரமண அமுதம்
புத்தரின் வைராக்கியம்
உண்மையின் வடிவம்
ரமண நட்சத்திரம்
ஆன்ம அனுபூதிக்கு சன்யாசம் அவசியமா- ரமணர் (தமிழ் ஹிந்து)
நான் யார்? (தமிழ் ஹிந்து)
ரமணர் பொன்மொழிகள்
RAMANA MAHARISHI
Sri Ramanashramam
Vedios of Ramana Maharishi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக